நாக்பூர் மாநகராட்சியில் பா.ஜ.க-முஸ்லிம் லீக் கூட்டணி!

imagesCALXG0EU
ஹிந்துத்துவா கட்சியான பா.ஜ.கவும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கும் கூட்டணி வைத்துள்ளன. நாக்பூர் மாநகராட்சியில் இந்த விசித்திரமான முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பை சம்பாதிக்கும் நடவடிக்கையாக முஸ்லிம் லீக்கின் உறுப்பினர்கள் ஹிந்துத்துவா அரசியல் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

இதனால் 145 உறுப்பினர்களை கொண்ட நாக்பூர் மாநகராட்சியில் 62 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.கவுக்கு மாநகராட்சியை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முஸ்லிம் லீக்கின் இஷ்ரத் அன்ஸாரி, அஸ்லம் கான் ஆகியோர் சங்க்பரிவாரின் அரசியல் கட்சியுடன் மாநகராட்சி ஆட்சியில் பங்காளிகளாக மாறியுள்ளனர்.

முஸ்லிம் லீக்கை தவிர பாரிபா பகுஜன் மஹா சங்க், லோக் பாரதி பார்டி, ரிபப்ளிகன் ஏகதா மஞ்ச் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் ஒன்பது சுயேட்சை உறுப்பினர்களும் பா.ஜ.க தலைமையிலான நாக்பூர் விகாஸ் அகதி(என்.வி.எ)  முன்னணியில் இடம் பெற்றுள்ளனர்.

12 உறுப்பினர்களை கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவை பெற பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் அவை தோல்வியை தழுவின. ஆறு உறுப்பினர்களை கொண்ட சிவசேனா கட்சி கூட்டணியில் இடம் பெறவில்லை என்றாலும், வெளியே இருந்து ஆதரிப்பார்கள் என கூறப்படுகிறது.

மார்ச் 5-ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 41 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி அந்தஸ்தை வகிக்கிறது. கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. முஸ்லிம் லீக்கை மதவாத கட்சி என்று அழைக்கும் பா.ஜ.கவும், பா.ஜ.கவை பாசிஸ்டு கட்சி என்று அழைக்கும் முஸ்லிம் லீக்கும் ஒன்றிணைந்தது அரசியல் விமர்ச்கர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. ஆனால், வெளியே உள்ளவர்களுக்கு ஆச்சரியம் தோன்றினாலும், இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று கூறுகிறார் பா.ஜ.கவின் மூத்த மாநகராட்சி உறுப்பினரும், என்.வி.எ கூட்டணியின் கண்வீனருமான அனில் சோலா. காரணம் கடந்த ஊராட்சி, சட்டப்பேரவை தேர்தல்களிலும் முஸ்லிம் லீக் தங்களின் கூட்டணி கட்சிப் போலவே ஒத்துழைத்து பணியாற்றியது என்கிறார் அவர்.பா.ஜ.க எம்.எல்.ஏவான தேவேந்திர ஃபட்னாவிசும் இதனை உறுதிச்செய்கிறார்.

முஸ்லிம் வாக்குகள் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் நாக்பூர் சென்ட்ரல், நாக்பூர் வெஸ்ட் ஆகிய தொகுதிகளில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரியின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி ஏற்பட்டுள்ளதாம்.

2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் கட்கரி முதன் முதலாக தேர்தல் களத்தில் நாக்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளார். இதில் முஸ்லிம் வாக்குகளை தனக்கு ஆதரவாக மாற்றுவதற்கு முஸ்லிம் லீக்குடன் கூட்டணி வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி - இஸ்ரேலில் போர் பதட்டம்

மத்திய தரைக்கடலில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க 2 போர்க்கப்பல்களை ஈரான் நிறுத்தியுள்ளது. இதனால் இஸ்ரேலில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் அணு உற்பத்தியை பெறுக்குவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதம் தயாரிக்க அவற்றை பயன்படுத்து வதாக குற்றம் சாட்டுகின்றனர். அதை ஈரான் மறுத்துள்ளது. மின் உற்பத்தியை செய்யவே அணு உலைகள் பயன்படுத்த படுவதாக கூறி வருகிறது.

இருந்தாலும் ஈரான் மீது உள்ள அச்சத்தில் அமெரிக்கா தனது 2-வது போர்க்கப்பலை அனுப்பி வைத்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தனது 2 போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடலில் நிலை நிறுத்தியுள்ளது. அவை சூயஸ் கால்வாயை கடந்து சென்றன.

இந்த தகவலை ஈரான் கப்பற்படை கமாண்டர் அட்மிரல் ஹபிபுல்லா சயாரி தெரிவித்துள்ளார். அனால் எதனை போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடலில் நிலை நிறுத்த பட்டுள்ளன என தெரிவிக்கவில்லை.

இஸ்லாமிய குடியரசு நாடுகளின் பாதுகாப்பு காகத்தான் ஈரானின் போர்க்கப்பல்கள்  மத்திய தரைக்கடலில்  நிறுத்த பட்டுள்ளன. அவை சமாதானம் மற்றும் நட்பு ஆகியவற்றை வலியுறுத்தவே அங்கு செல்கின்றன. போர் நடத்துவதற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரத்தில் இஸ்ரேலில் போர் பதட்டம் நிலவுகிறது. ஈரான் தனது அணு ஆயுதம் மூலம் தங்கள் நாட்டை தாக்க திட்டம் வைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ மந்திரி இகுட் பராக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கரமான விளைவுகள் ஏற்படும் என, ஐந்து நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள இஸ்ரேல் ராணுவ அமைச்சர்  இகுட்  பராக்கிடம் ஜப்பான் பிரதமர் நோடா  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அணு ஆயுதம் தாங்கிய கப்பலை ஈரான் எல்லையில் நிறுத்தியது அமெரிக்கா !

ஈரானில் அணுஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதை ஈரான் மறுத்துள்ளது. மின் உற்பத்திக்காக அணு உலைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதை நம்ப மறுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதார தடைவிதித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரபு நாடுகளில் இருந்து புறப்படும் எண்ணை கப்பல்கள் ஸ்ரெய்ட் ஆப் ஹோர்மீஸ் துறைமுகம் வழியாக செல்ல ஈரான் மறைமுக தடைவிதித்தது. இங்கு அடிக்கடி கடலில் போர் ஒத்திகை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, விமானம் தாங்கி போர்க்கப்பலை அரபு வளைகுடா பகுதிக்கு அனுப்பியது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரானில் இருந்து தான் கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதற்கிடையே, போர்ச்சுக்கல், இத்தாலி, கிரீஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய 6 நாடுகளுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணை சப்ளையை நிறுத்த போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இது விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. அனைத்துக்கும் மேலாக அதிநவீன அணு தொழில் நுட்பத்தை ஈரான் அறிவித்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த் தியுள்ளது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தனது நட்பு நாடான இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. எனவே, இஸ்ரேலின் பாதுகாப்புக்காக தனது ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை ஸ்ரெய்ட் ஆப் ஹோர்ம்ஸ் துறைமுகம் பகுதிக்கு அனுப்பி உள்ளது.

இந்த போர்க்கப்பலில் அணு ஆயுதங்கள் உள்ளன. இது ஸ்ரெய்ட்ஸ் ஆப் ஹோர்ம்ஸ் துறைமுகத்தில் இருந்து 21 கடல் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதன் அருகே 2 கடல் மைல் தூரத்தில்தான் ஈரான் கப்பற்படை படகுகள் ரோந்து சுற்றி வருகின்றன. இதனால், அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. அமெரிக் காவும், ஈரானுக்கும் போருக்கு தயாராக உள்ளதால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

IFF நடத்திய ஆரோக்கியமான வாழ்க்கையே! மகிழ்ச்சியான வாழ்க்கை! நிகழ்ச்சி


இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம் (IFF) ஜித்தா கிளை நடத்திய ஆரோக்கியமான வாழ்க்கையே!மகிழ்ச்சியான வாழ்கை! நிகழ்ச்சி ஷெனையா ARIFCO கேம்பில்  நேற்றைய தினம்  நடைபெற்றது.


ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை மருத்துவ ரீதியாக சகோதரர் அல்-அமான் பவர்பாயிண்ட் காட்சிகளின் (presentation) மூலம் தொகுத்தளித்தார்.


இதையடுத்து குர்-ஆன் மற்றும் ஹதீஸின் பார்வையில் சகோதரர் ஷேக் அப்துல்லா அவர்கள் “இஸ்லாத்தின் பார்வையில் ஆரோக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக யோகா மாஸ்டர் சிராஜ், மக்கள் அன்றாட வாழ்க்கையில் பேண வேண்டிய உடற்பயிற்சிகளை (ஆசனங்களை) சகோதரர் நௌஷாத் உதவியுடன் செய்து காட்டினார்.

முன்னதாக நிகழ்ச்சியினை திருமறைக் குர்-ஆன் வசனங்களை ஓதி சகோதரர் ஷேக் அப்துல்லா துவக்கி வைத்தார். சகோதரர் முஹம்மது அப்பாஸ்  அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஐ.எப்.எப்.இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம்(IFF) ஆற்றி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை அதன் செயலாளர் சகோதரர் முஹம்மது அப்பாஸ் விவரித்தார். சகோதரர் சுல்தான்  நன்றி உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

INTJ முயற்சியால் சங் பரிவார் சூழ்ச்சி தடுக்கப்பட்டது!

சமுதாயப் பெண்களை காதல் என்கிற பெயரில் வளைத்து அவர்களை மதம் மாற்றும் செயலுக்கு ஊக்கமும் உதவித் தொகையும் வழங்கும் இந்துத்துவ அமைப்புகளின் சூழ்ச்சிக்கு தொடர்ந்து நம் பெண்கள் பலியாகி வருகின்றனர். நம்மால் இயன்ற அளவு பிரசாரத்தின் மூலமும் கண்காணிப்பு மூலமும் இதை தடுத்து வருகிறோம்.! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று கடற்கரையில் பிரச்சாரத்திற்கு சென்ற போது பிடிபட்ட 10 முஸ்லிம் பெண்களில் 9 பேர் முஸ்லிம் அல்லாதவர்களுடன்    வந்திருப்பது தெரிந்து சமுதாயம் அதிர்ந்து போனது.  

 

அதே போன்று அவர்களை திருமணம் செய்யும் பெண்கள் இஸ்லாமிய பெயர் மற்றும் அடையாளங்களோடு பத்திரிகை அடித்து பகிரங்கமாக முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த பகுதிகளிலேயே இந்த திருமணங்களை   நடத்தும் நிலை சமிபத்தில் அதிகமாகி உள்ளது. இது வேண்டுமென்றே நம்மை வம்புக்கிழுத்து நம் உணர்வுகளை சீண்டி  பார்க்கும் செயலாக   உள்ளது.

இது போன்ற ஒரு திருமண வரவேற்பு பத்திரிகை நமது கைகளில் கிடைத்தது. திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள அந்தப் பெண்ணின் பெற்றோரை கிளை நிர்வாகிகள் அணுகி விசாரித்த போது அவர்கள் நாங்கள் தலை முழுகி விட்டோம் எங்கள் பேச்சை கேட்காமல் இது நடக்கிறது என சொன்னார்கள்.

பெற்றோர் சம்மதம் இல்லாத   நிலையில் இது வேண்டும் என்றே வம்புக்கிழுக்கும் நோக்குடன் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ,  பெண்ணின்  பெற்றோர் வாழும் பகுதியில் மண்டபத்தை தேர்ந்தெடுத்து சீண்டிப்  பார்க்கும் இந்துத்துவா முயற்சி என அறிந்து மண்டப நிர்வாகியிடம் இந்த நிகழ்ச்சி நடந்தால் பிரச்னை ஏற்படும் என எச்சரித்தும் பலனின்றி போனதால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மற்றும் திருவல்லிக்கேணி நிர்வாகிகள் ஜாம் பஜார் காவல் நிலைய ஆய்வாளருக்கும் உதவி ஆணையருக்கும் புகார் அளித்து இதை தடுத்து நிறுத்த கோரிக்கை விடுக்கப் பட்டது.


 

மேலும் நீங்கள் இதில் நடவடிக்கை எடுக்கவில்லையாயின் மாபெரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சந்திக்க நேரிடும் என உளவுத்துறை அதிகாரிகளிடத்தில் சொன்னதை அடுத்து உளவுத்துறை அதிகாரிகள் சம்பந்தப் பட்ட வீட்டிற்க்கே நேரே சென்று பிரச்சனையின் தீவிரத்தை எடுத்து சொல்லி, இந்த நிகழ்ச்சி நடந்தால் மிகப் பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகையால் நீங்கள் வேறு பகுதியில் வைத்துக் கொள்ளுங்கள் ! என அதிகாரிகள் கூறியுள்ளனர். கழுத்தில் புது தாலியும் நெற்றியில் குங்குமமும் வைத்திருந்த அந்தப் பெண்ணிடம் பேசிய அதிகாரிகள் "நீ எப்போது இந்துவை திருமணம் செய்து விட்டாயோ அப்போதே நீ சட்டப்படி உன் பெயர் மாற்றி அந்தப் பெயரில் பத்திரிகை அடித்து நடத்துவது தான் முறையாகும்" என எடுத்து சொல்லியதன் பெயரில் இந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட மண்டப வாசலில் அதற்கான அறிவிப்பும் எழுதி வைக்கப்பட்டது. இந்துத்வாவின் குழப்பத்தை முறியடிக்க இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செய்த முயற்சியை பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்!


உங்கள் கண் முன்னே ஒரு தீமை நடந்தால் கரம் கொண்டு தடுங்கள், இயலவில்லை என்றால் நாவால் தடுங்கள் -நபி மொழி
Maintain By Koothanallur Muslims . Design by Abdul